ராபர்ட் மாஸ்டரை திருமணம் செய்யும் வனிதா? - வெளியான புகைப்படம்!


சென்னை: தனது முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டருடன் வனிதா இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

சர்ச்சைப் பேச்சுகளுக்குப் பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். பின்பு இரண்டாவது திருமணம் ராஜன் என்பவருடன் நடந்தது. இந்த இரண்டு திருமணங்களும் விவாகரத்தில்தான் முடிந்தது. பின்னர், நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. கடைசியாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்வதாக அறிவித்தார். அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

ராபர்ட் மாஸ்டருடன் தற்போது காதலில் இல்லை என்றாலும் இருவரும் நட்பில் தொடர்ந்தார்கள். வனிதாவின் சிபாரிசிலேயே பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் ராபர்ட் மாஸ்டர் போட்டியாளராக உள்ளே வந்தார். இந்த நிலையில், கடற்கரையில் ராபர்ட் மாஸ்டரிடம் வனிதா புரோபஸ் செய்யும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில், அக்டோபர் ஐந்தாம் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதைப் பார்த்த பலரும் ‘இது என்ன தேதி? இவர்கள் மீண்டும் ஒன்று சேர்கிறார்களா? வனிதா மீண்டும் திருமணம் செய்ய இருக்கிறாரா?’ எனக் கேட்டு வருகின்றனர். இன்னொரு தரப்பு ரசிகர்கள், ‘இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான புரோமோஷனாகதான் இதை செய்கிறார்கள்’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

x