[X] Close

எனக்கு வடிவேலுதான் பிடிக்கும்; மீண்டும் அவரோட நடிக்க ஆசைப்படுறேன் – விவேக் ஆசை


vivek-vadivelu

வடிவேலு - விவேக்

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 19:37 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

எப்பவுமே வடிவேலு காமெடி ரொம்பவே பிடிக்கும். திரும்பவும் அவரோட சேர்ந்து நடிக்கணும்னு ஆசைப்படுறேன் என்று நடிகர் விவேக் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

நடிகர் விவேக் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

அதில் விவேக் கூறியதாவது:

இப்போது உள்ள காமெடி நடிகர்களில் சூரி மிகச்சிறப்பாகப் பண்ணுகிறார். நிறைய படங்களில் அவருடைய நடிப்பும் காமெடியும் சிறப்பான முறையில் வந்திருக்கிறது. பழகுவதற்கும் இனியவராக இருக்கிறார் சூரி.

மற்றபடி, எப்பவுமே வடிவேலு காமெடிதான் ரொம்பவே பிடிக்கும். வி.சேகர் இயக்கத்தில் வடிவேலுவும் நானும் சேர்ந்து நடித்திருக்கிறோம். ஏகப்பட்ட படங்கள் செய்திருக்கிறோம். வி.சேகர் படங்கள் மட்டுமின்றி, மனதைத் திருடிவிட்டாய் முதலான படங்களிலும் எங்களின் காமெடி பேசப்பட்டது.

எங்களைத் தனித்தனியாகவும் மக்கள் ரசித்தார்கள். சேர்ந்து நடித்த போதும் ரசித்தார்கள். மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அப்படியொரு காம்பினேஷன் வந்தால், இன்னும் சிறப்பாகச் செய்து, நல்ல நல்ல காமெடிகளை வழங்குவோம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் சரியான புரிதல் இல்லை என்பது போலெல்லாம் பேசிக்கொள்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதேபோல என்னை அவருக்கு நன்றாகவே பிடிக்கும். நாங்கள் பேசிக்கொள்வதில்லை. சந்தித்துக்கொள்வதில்லை. ஆனாலும் மானசீகமான நட்பொன்று எங்களுக்குள் இருக்கிறது. 

இவ்வாறு விவேக் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close