[X] Close

கதைத் திருட்டு பெரிய சவாலா இருக்கு; பா.ரஞ்சித் வேதனை


kadhai-thiruttu-pa-ranjith

இயக்குநர் பா.ரஞ்சித்

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 18:35 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

இப்போது கதைத் திருட்டுதான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. கதைகளை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யவேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதை திறந்துவைத்து இயக்குநர் பா.ரஞ்சித் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

கதைத் திருட்டு என்று சொல்லப்படுகிற புகாரில் உண்மை இருக்கிறது. அதேசமயம் பொய்யும் இருக்கிறது. உண்மை எனும் பட்சத்தில் அதை நிரூபிக்கவேண்டிய கட்டாயமும் கடமையும் இருக்கிறது. உண்மையா, பொய்யா என்பதைக் கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சவால்தான்.

உண்மையான படைப்பாளி யார், எங்கே திருடப்பட்டது என்பதையெல்லாம் நிச்சயமாக கவனித்து நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். இதுதொடர்பான திட்டமிடல், தமிழ் சினிமாச் சூழலில் இல்லவே இல்லை.

கதையைப் பதிவு செய்வது என்பது எல்லோருமே செய்யவேண்டும். ஆனால் அதைப் பலரும் செய்வதே இல்லை. யாராவது நம் கதையைத் திருடிவிடுவார்களோ எனும் பயமும் அவசியமும் இப்போதுதான் உணர ஆரம்பித்திருக்கிறோம். எனவே, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் கதைகளைப் பதிவு செய்யவேண்டும். கதைத்திருட்டுகளைத் தடுக்கவேண்டும்.

இவ்வாறு பா.ரஞ்சித் தெரிவித்தார்.  

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close