[X] Close

அஜித் ஒரு ஜென்டில்மேன் - இயக்குநர் விக்ரமன் புகழாரம்


ajith-jentlemen-vikraman

அஜித் - விக்ரமன்

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 10:08 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

அஜித் ஒரு ஜென்டில்மேன். மற்றவர்களை மதிப்பதிலும் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அவரைப் போல் நான் பார்த்ததில்லை என்று இயக்குநர் விக்ரமன் தெரிவித்தார்

இயக்குநர் விக்ரமன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

நடிகர் அஜித், பக்கா ஜென்டில்மேன். எப்போதும் எல்லோருடனும் அப்படித்தான் நடந்துகொள்வார். டூப் போட்டு நடிக்கமாட்டார். பெரும்பாலும் எவ்வளவு ரிஸ்க்கான காட்சிகள் என்றாலும் அவரே நடித்துவிடுவார்.

பைக் ரேஸில் கலந்துகொண்டு, மூன்று நான்கு முறை காயம் ஏற்பட்டு, 36 தடவை ஆபரேஷன் நடந்திருக்கிறது அவருக்கு. ஆனாலும் அஜித், டூப் போடவே மாட்டார். போராடுகிற மனிதர் அவர். போராடிப் போராடித்தான் அஜித், இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார்.

மற்றவர்களை மதித்து நடப்பார். எல்லோரிடமும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வார். மனிதநேயத்துடன் பழகுவதுதான் அஜித் ஸ்டைல்.

அதேபோல, எத்தனையோபேருக்கு உதவிகள் செய்திருக்கிறார். அப்போதே, சத்தமில்லாமல் உதவி செய்திருக்கிறார். என்னைப் பொருத்தவரை, அஜித்தை இன்னொரு எம்.ஜி.ஆர். என்றுதான் சொல்லவேண்டும்.

அப்படியொரு ஜென்டில்மேன் அஜித். அவரை நான், அஜித் என்று கூப்பிடமாட்டேன். ஜென்டில்மேன் என்றுதான் கூப்பிடுவேன். ஜென்டில்மேன் என்ற வார்த்தைக்கு பொருந்தக்கூடியவர் அஜித்.

இவ்வாறு விக்ரமன் தெரிவித்தார்.

  

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close