[X] Close

2 பாயிண்ட் ஓஹோனு வரனும்: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வாழ்த்து


ks-ravikumar-wishes-2-0-crew

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 03 Nov, 2018 16:08 pm
  • அ+ அ-

லைகா தயாரிக்க, ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை காலை நடந்தது. இதில் விழாவில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்கள் சிலர், வீடியோ மூலமாக படக்குழுவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அப்படி ரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் தனது வாழ்த்தை வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். 

"2.0 - 2 வருஷமானாலும் சரி, 3 வருஷமானலும் சரி, எப்ப வந்தாலும் அதுக்கான எதிர்பார்ப்பு மட்டும் குறையவே குறையாது. ஏன்னா ரஜினி சாரை இளமையா, புது ஸ்டைல்ல, ஆக்‌ஷன் ஹீரோவா பார்க்கதான் இன்றும் ரஜினி ரசிகர்கள் விரும்பறாங்க. நானும் ஒரு ரசிகன் தான்.  அதனால அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையாது. படம் எப்ப வந்தாலும் கண்டிப்பா வெற்றி பெறனும். கண்டிப்பா ஷங்கர் பின்னியிருப்பாரு. அவர் பிரம்மாண்டத்தை பத்தி தனியா சொல்ல வேணாம். 

ஷங்கர், ரஜினி சார், ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ், அக்‌ஷய் குமார்னு எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மொத்ததுல 2.0, உலகம் பூரா 2 பாயிண்ட் ஓஹோனு வளரனும்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன். நன்றி" என்று கே.எஸ்.ரவிக்குமார் வீடியோவில் பேசியுள்ளார்.  

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close