[X] Close

ஷங்கர் உழைப்புக்கான ஊதியம் கண்டிப்பாகக் கிடைக்கும்: கமல்ஹாசன் 


kamal-wishes-for-2-0

கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 03 Nov, 2018 16:07 pm
  • அ+ அ-

இயக்குநர் ஷங்கரின் உழைப்பைப் பற்றி தனக்குத் தெரியும், அதற்கான ஊதியம் கிடைக்கும் என நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார்

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை காலை நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். கலந்து கொள்ள முடியாதவர்கள், வீடியோ மூலமாக படக்குழுவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நடிகர் கமல்ஹாசனும் தனது வாழ்த்துச் செய்தியை வீடியோ பதிவாக அனுப்பியிருந்தார். அதில், "2.0 படக் குழுவினருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நண்பர் லைகா சுபாஷ்கரனுக்கும், நண்பர் ரஜினி அவர்களுக்கும், ரஹ்மான் அவர்களுக்கும், அக்‌ஷய் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். ரஜினி திரைப்பட வாழ்க்கையில் இன்னொரு மைல்கல்லாக இந்தப் படம் அமையும் என்று அவரது ரசிகர்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். அதற்கான வாழ்த்துக்கள். 

உங்கள் உழைப்புக்கான ஊதியம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நண்பர் ஷங்கருக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எவ்வளவு பெரிய  உழைப்பாளி என்பது எனக்குத் தெரியும். இந்த படத்தின் தொழில்நுட்பச் சுமையெல்லாம் தன் தோளில் சுமந்து இதை நல்ல ஒரு படமாக செதுக்கியிருக்கும் அவருக்கும் என் வாழ்த்துக்கள்" என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் பேசுகையில் கமல்ஹாசன் - ஷங்கர் இணையின் இந்தியன் 2 படத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close