[X] Close

வந்தா சொல்லி அடிக்கனும்; ஜனங்க முடிவு பண்ணிட்டாங்க!- ரஜினி சூசக பேச்சு


rajini-on-2-0

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Nov, 2018 13:22 pm
  • அ+ அ-

2.0 படத்தை குறித்து பேசிய நடிகர் ரஜினி, "வந்தா ஸூரா (sure) அடிக்கனும். .ஜனங்க வரும்னு முடிவு பண்ணிட்டாங்க.  நான் சினிமாவ சொன்னேன். ஹிட்டுன்னும் முடிவு பண்ணிட்டாங்க. படம் சூப்பர் டூப்பர் ஹிட்" என்றார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் லான்ச் நடைபெற்றது. 

இதில் பேசிய நடிகர் ரஜினி, "எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். இந்தப் படத்துக்கு லைகாவின் சுபாஷ்கரன் ரூ.600 கோடி இன்வெஸ்ட் செய்திருக்கிறார். என்னை நம்பியில்லை. ஷங்கரை நம்பி முதலீடு செய்திருக்கிறார். ஷங்கர் ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்யத் தவறுவதில்லை.

இந்தப் படம் ஆரம்பித்தபோது எனக்கு உடல் நிலை மோசமானது. என்னால் 5 வரி வசனம்கூட பேச முடியாமல் போனது. என்னை விட்டுவிடுங்கள் ஷங்கர். என்னால் முடியவில்லை. வாங்கிய பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன் என்றேன். ஷங்கர், சார் நீங்க இல்லாமல் இது முடியாது என்றார். ஷூட்டிங்கில் அவ்வளவு உதவியாக இருந்தார்.

ஷங்கரின் இந்தப் படம் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். ஷங்கரும் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், சுபாஷ்கரன் பற்றியும் சொல்ல வேண்டும். நல்ல நண்பர்கள் கோஹினூர் வைரம் மாதிரி. சுபாஷ் எனக்கு அப்படித்தான். நான் உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் என்னை தனிமையில் சந்தித்துப் பேசினார். என் கைகளைப் பிடித்துக் கொண்டு 4 மாதங்கள் இல்லை சார் 4 வருடங்கள்கூட காத்திருப்பேன். முடியவில்லை என்றால் படத்தை ட்ராப் செய்வேன். ஆனால், நீங்கள் இந்தப் படத்தை செய்வீர்கள் என்றார். நன்றி சுபாஷ்.

இடையில் இந்தப் படம் ஏன் இவ்வளவு லேட் ஆகுது. வருமா என்றெல்லாம் பேசினார்கள். வந்தா ஸூரா அடிக்கனும். நான் சினிமாவ சொன்னேன். ஜனங்க வரும்னு முடிவு பண்ணிட்டாங்க. .ஹிட்டுன்னும் முடிவு பண்ணிட்டாங்க. படம் சூப்பர் டூப்பர் ஹிட்"

இவ்வாறு ரஜினி பேசினார்.
 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close