[X] Close

விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்னு அப்பவே சொன்னேன் – இயக்குநர் விக்ரமன்


superstar-vijay-vikraman

இயக்குநர் விக்ரமன் - விஜய்

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 20:53 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பூவே உனக்காக படம் பண்ணும்போதே, அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்னு சொன்னேன் என்று இயக்குநர் விக்ரமன் தெரிவித்தார்.

மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தவரும் நம்பிக்கையை விதைக்கும் கதைக்களனுக்கு சொந்தக்காரருமான இயக்குநர் விக்ரமன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு விக்ரமன் பதில் அளித்ததாவது:

பூவே உனக்காக படத்தில் விஜய் நடிக்கும் போது, அவரின் இன்வால்வ்மெண்ட் பார்த்து வியந்திருக்கிறேன். சண்டைக்காட்சிகளுக்கு டூப் போடமாட்டார். படத்தில் ஒரு சண்டைக்காட்சி எடுத்திருந்தேன். ஆனால் தேவையில்லை என்பதால் எடுத்துவிட்டேன். அதேபோல ஒரு பாடலுக்கு கெளபாய் வேடத்தில் குதிரையில் வரும்போது அவ்வளவு உயரத்தில் இருந்து வருவதற்கு டூப் போடலாம் என்றபோது வேண்டாம் என்று அவரே நடித்தார்.

அதேபோல விஜய்க்கு மெமரி பவர் உண்டு. வசனத்தை ஒரேயொரு முறை கண்மூடி கேட்டுக்கொள்வார். அப்புறம் மளமளவென சொல்லிவிடுவார். இதையும் பார்த்து வியந்திருக்கிறேன். நடனம், சண்டை, நடிப்பு என்று எல்லாமே இயல்பாக வரும் விஜய்க்கு.

அதேபோல், படத்தின் டப்பிங் பற்றியும் சொல்லவேண்டும். அப்போது மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். காலையில் சீக்கிரமே வந்து ஒன்றரை மணி நேரம் டப்பிங் ஒர்க் பண்ணுவார். அந்த நேரத்தில், பத்துப்பதினைந்து காட்சிகள் முடித்துவிடுவார். பிறகு அடுத்தநாள், ஒன்றரை மணிநேரம், அடுத்தநாள் ஒன்றரை மணி நேரம் என்று வந்து நான்கே நாட்களில் டப்பிங் ஒர்க்கை முடித்துக் கொடுத்தார்.

அப்போதே விஜய்யின் அப்பாவிடமும் அம்மாவிடமும் ‘விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா வருவாரு பாருங்க’ என்றேன். அதுமட்டுமில்லாமல், எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களிடமெல்லாம், ‘விஜய் பெரியாளா வருவாரு. அவரை வைச்சு படம் பண்ணுங்க. ஹிட் நிச்சயம்னு சொன்னேன். பூவே உனக்காக படம் ஹிட்டாகுமா தெரியாது. நான் இதுல ஜெயிப்பேனான்னும் தெரியாது. ஆனா விஜய் பெரியாளா வருவார்.அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்’ என்று நிறையபேரிடம் சொல்லியிருக்கிறேன். அதன்படியே இன்றைக்கு மிகப்பெரிய உயரத்துக்கு வந்துவிட்டார் விஜய்.

இவ்வாறு விக்ரமன் தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close