[X] Close

மீ டூ; மன்னிக்கறதை மன்னிச்சிருங்க- நடிகை விசித்ரா கருத்து


metoo-vichithra

நடிகை விசித்ரா

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 20:10 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

மீ டூ விஷயத்தில் மன்னிப்பதை மன்னித்துவிடுங்கள். மன்னிக்கவே முடியாது என்று தோன்றுவதை விடவே விடாதீர்கள் என்று நடிகை விசித்ரா தெரிவித்தார்.

மீடு விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகிக் கொண்டிருக்கும் சூழலில், மீ டூ குறித்து நடிகை விசித்ரா தெரிவித்ததாவது:

மீ டூ என்பது தனக்கு மட்டுமே நடந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் சொல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. இங்கே நிறைய பேருக்கு இந்தப் பிரச்சினைகளும் அவமானங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

என்னைப் பொருத்தவரை நான் சொல்வது ஒன்றுதான். மீ டூ விஷயத்தில், மன்னிக்கிற மாதிரியான செயல்களை தயங்காமல் மன்னித்துவிடுங்கள். உங்களுடைய மரியாதைக்கு பங்கம் வருவதாக இருந்தாலோ, குடும்பத்தில் குழப்பங்கள் வருவது போல் இருந்தாலோ, உங்களுடைய திரையுலக வாழ்க்கைக்கே இடையூறு ஏற்படுவது போலான சூழ்நிலைகள் இருந்தாலோ, வெளியே சொல்லிவிடுங்கள். அவர்களை விடவே விடாதீர்கள்.

இந்த மீ டூ என்பது, ஏதோ அவர்களை கோர்ட்டுக்கு அழைத்து, ஜெயிலில் தள்ளி, பத்து வருடம் தண்டனை தரவேண்டும் என்பதெல்லாம் இருக்கவேண்டும் என்பதில்லை. இதை வெளியே சொல்லுவது கூட சம்பந்தப் பட்டவர்களுக்கு மிகப்பெரிய தண்டனைதான்.

மன்னிப்பதை மன்னிப்பதும் மன்னிக்கவே முடியாததை விடவே விடாமல் போராடுவதும் என்பதிலெல்லாம் உறுதியாக இருக்கவேண்டும்.

இவ்வாறு நடிகை விசித்ரா தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close