[X] Close

மீ டூ இயக்கத்தை கேலி செய்யாதீங்க; கமல் வேண்டுகோள்


metoo-kamal-advice

கமல்ஹாசன்

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 19:22 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

மீ டூ இயக்கத்தை கேலி செய்யாதீர்கள். அந்தக் குரல் இன்னும் இன்னும் அதிகரிக்கட்டும். கோரஸாக ஒலிக்கட்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கல்லூரி ஒன்றில் பேசினார்.

அப்போது அவர் மீ டூ குறித்து தெரிவித்ததாவது:

மீ டூ என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறோம். தமிழில் ‘நானும்’ என்று அர்த்தம். இந்த ‘நானும்’ என்ற சொல், கொஞ்சம் கொஞ்சமாக கோரஸாகிக் கொண்டிருக்கிறது.

இதை ஏன் இப்போது சொல்லுகிறார்கள். இதை ஏன் அப்போதே சொல்லவில்லை என்றெல்லாம் கேட்காதீர்கள். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். தவறில்லை. தைரியமாகவும் நியாயமாகவும் எழுந்துள்ள குரல், இன்னும் எழட்டும். இன்னும் இன்னும் தைரியமாக குரல்கள் ஒலிக்கட்டும். அதை கேலி செய்யாதீர்கள்.

உடன்கட்டை ஏறுவது தவறு என்பதை 200 வருடங்களுக்கு முன்பு சொன்னதும் சரிதான். இப்போது சொன்னாலும் அது சரியானதுதான்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close