[X] Close

தீபாவளிக்கு சன் டிவியில் '96' ப்ரீமியர்


suntv-airs-96-for-diwali

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 02 Nov, 2018 17:55 pm
  • அ+ அ-

தீபாவளி தினத்தை முன்னிட்டு சன் டிவியில் மாலை 6.30மணிக்கு 96 படம் திரையிடப்படவுள்ளது.

பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே தனியார் சேனல்களில் என்னென்ன புதுப்படங்கள் திரையிடப்படும் என பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதில் சேனல்கள் இடையே கடும் போட்டியும் நிலவுகிறது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, சில வாரங்களே ஆன, சில நாட்களே ஆன என பலவிதமான விளம்பரங்களுடன் புதுப்படங்கள் திரையிடப்படும்.

அப்படி இந்த தீபாவளிக்கு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி இன்னமும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் '96' படம் சன் டிவியில் திரையிடப்படவுள்ளது. மாலை 6.30 மணிக்கு இந்தப் படம் திரையிடப்படுகிறது.

திரைக்கு வந்து தோல்வியடைந்த பல படங்கள் ஒரு சில வாரங்களிலேயே சேனல்களில் ஒளிபரப்பாகியுள்ளன. ஆனால் அக்டோபர் 4 அன்று வெளியான 96, பெரிய வெற்றி பெற்றிருந்தும் சரியாக ஒரு மாதத்துக்குள் திரையிடப்படுகிறது. 

சேனல்களிடையே இருக்கும் கடும் போட்டியை சமாளிக்கவே சன் டிவி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தீபாவளி அன்று வெளியாகும் சர்கார் திரைப்படம் சன் பிக்சர்ஸின் தயாரிப்பே. 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close