[X] Close

என் கதைக்கும் ரஜினிமுருகன் கதைக்கும் 50 சதவிகிதம் ஒற்றுமை - சமுத்திரகனி சொல்கிறார்


samudhrakani-rajini-murugan

இயக்குநர் சமுத்திரகனி

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 12:30 pm
  • அ+ அ-

ஒரே மாதிரியான சிந்தனை என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரும். நான் சிவகார்த்திகேயனிடம் சொன்ன கதையில் அப்படியே 50 சதவிகிதம் ரஜினி முருகன் படத்தில் இருந்தது என்று இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி தெரிவித்தார்.

கதைத் திருட்டு குறித்த கேள்விக்கு இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி தெரிவித்ததாவது:

ஒரே சிந்தனை பலருக்கும் வரும். அதை ஒன்றும் செய்யமுடியாது. அதை கதைத் திருட்டு என்று சொல்லிவிடமுடியாது. சிவகார்த்திகேயனை வைத்து இயக்கத் திட்டமிட்டிருந்தேன். அவருக்கு கதையும் சொன்னேன். சிலமாதங்கள் கழித்து சிவகார்த்திகேயன் வந்தார். ‘நீங்க சொன்ன கதைல 50 சதவிகிதம் ரஜினி முருகன் படக்கதைல அப்படியே இருக்குது’ என்றார்.

‘உங்க படத்துல பாட்டி கேரக்டர் வைச்சிருக்கீங்க. ஆனா பொன்ராம், தாத்தா கேரக்டர் வைச்சிருக்கார். அப்புறம் தம்பி ராமையா கேரக்டர் வைச்சிருக்கீங்க. அதேபோல ஒரு கேரக்டர்லதான் உங்களை நடிக்கவைக்க ஆசைபடுறோம்’ என்றும் சொன்னார்.

இதில் எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை. பொன்ராமும் மதுரைக்காரர். நானும் மதுரைக்காரன். அதனால் அப்படித்தான் கதை பண்ணுவோம். அதனால, ரொம்ப சந்தோஷமா அந்தப் படத்துல நடிச்சேன்.

இதை ஸேம் தாட்னுதான் எடுத்துக்கணும். அதுதான் உண்மையும் கூட. அதனால கதைத் திருட்டுன்னு கொச்சைப்படுத்தாதீங்க. ஒருத்தருக்கொருத்தர் பேசித் தீர்த்துக்கற பிரச்சினையை, ஊதி ஊதிப் பெருசாக்காதீங்க. ரொம்ப எளிமையா, இனிமையா, அழகா விட்டுக்கொடுத்துட்டு போகணும். அதான் என் கருத்து.

இவ்வாறு சமுத்திரகனி தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close