சென்னையில் அம்மாவுக்குப் பிடித்த இடம் என்று நடிகை ஜான்வி கபூர், சென்னை முப்பாத்தம்மன் கோயிலுக்கு விசிட் அடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பாலும், திறமையாலும் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவரது மூத்த மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் அடுத்தடுத்துப் படங்கள் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ‘மிஸ்டர் & மிஸஸ் மஹி’ என்ற ஸ்போர்ட்ஸ் டிராமா படம் வெளியாக இருக்கிறது. இதற்காக, தீவிர புரோமோஷனில் இறங்கியுள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியைக் காண, படத்தின் கதாநாயகன் ராஜ்குமார் ராவுடன் நேரில் வந்திருந்தார் ஜான்வி. சேப்பாக்கத்தில் கொண்டாட்டங்கள் முடிந்த பின்பு, சென்னையில் கோயிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளார் ஜான்வி.
நடிகையும் ஸ்ரீதேவியின் உறவினர் மகேஸ்வரி அய்யப்பனுடன் முப்பாத்தம்மன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார். சென்னையில் ஸ்ரீதேவிக்குப் பிடித்த இடம் இது என்றும் உருகியுள்ளார். மேலும், தனது படம் வெற்றிப் பெறவும் வேண்டியுள்ளார்.
தனது ஆன்மிக பயணம் குறித்து பேசிய ஜான்வி, “அம்மாவுக்கு கடவுள் பக்தி அதிகம். வெள்ளிக்கிழமை முடி வெட்டக் கூடாது, கருப்பு நிற உடை அணியக் கூடாது என நிறைய நம்பிக்கைகள் வைத்திருந்தார். அவர் இருந்தபோது அதை எல்லாம் நான் பெரிதுபடுத்த மாட்டேன். ஆனால், அவர் மறைந்த பின்னர் நான் தீவிரமாக கடவுளை வழிபட ஆரம்பித்து விட்டேன்” எனக் கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!