'கல்கி 2898 ஏடி’ படத்திற்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட புஜ்ஜி காரை ஓட்டிப் பார்த்து குஷியாகியுள்ளார் நடிகர் நாக சைதன்யா. இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்ளிடப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'கல்கி 2898 ஏடி’. அடுத்த மாத இறுதியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கான புரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில், இந்தப் படத்தில் புஜ்ஜி என்ற கார் ஸ்பெஷல் கதாபாத்திரமாக படத்தில் வருகிறது. குறிப்பாக, இந்த புஜ்ஜி கார் பிரபாஸூடன் கதையில் பயணிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த காரை நடிகர் நாகசைதன்யா ஸ்பெஷலாக ஓட்டிப் பார்த்துள்ளார்.
காரின் வடிவமைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நாக சைதன்யா, ‘அனைத்து இன்ஜினியர்களின் ரூலையும் பிரேக் செய்து விட்டீர்கள்’ என பாராட்டிக் கொண்டே இந்த காரை ஓட்டிப் பார்த்திருக்கிறார். காரில் பயணித்த அனுபவம் அவருக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்திருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
பான் வேர்ல்ட் படமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தின் அறிமுக விழா கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற காமிக்கான் நிகழ்வில்தான் நடந்தது. படத்தின் கதை மகாபாரத்தில் இருந்தே தொடங்குவதாக இயக்குநர் நாக் அஸ்வின் முன்பு சொல்லி இருந்தார்.
இந்தப் படத்தில் 15 நிமிடங்கள் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். இதற்காக அவர் சுமார் ரூ. 20 கோடி சம்பளம் வாங்கினார் என்ற விஷயமும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இதையும் வாசிக்கலாமே...