ரூ. 640 கோடியில் மருமகளுக்குப் பரிசு... அசத்திய அம்பானி மனைவி!


அம்பானி குடும்பத்தின் மருமகளாக வரவிருக்கும் ராதிகா மெர்சன்ட்க்கு, நீடா அம்பானி ரூ.640 கோடி மதிப்பில் விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு வில்லா ஒன்றை பரிசளித்துள்ளார்.

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணம் எங்கு எப்படி நடக்கப் போகிறது என்பது தான் பலரின் எதிர்பார்ப்பும். முன்னதாக, ஜாம்நகரில் மூன்று நாட்கள் பிரம்மாண்டமாக நடந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் பலதுறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானி குடும்பம்

ஜூலை 12ம் தேதி நடைபெறும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு மே28ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. இதற்காக உல்லாச கப்பல் ஒன்று 800 விருந்தினர்களுடன் இத்தாலியில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் சென்றடைகிறது. அம்பானி குடும்பத்தின் மருமகளுக்கு நீடா அம்பானி விலையுயர்ந்த சொகுசு வில்லா ஒன்றை பரிசளித்துள்ளார்.

துபாயில் உள்ள இந்த வில்லாவின் மதிப்பு மட்டும் ரூ. 640 கோடி என்று வாய்பிளக்க வைத்துள்ளது. இந்த வில்லாவில் 10 ஆடம்பர படுக்கையறைகள் இருக்கிறது. வில்லாவிற்கு வெளியே சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு பிரைவேட் கடற்கடையும் உள்ளது.

வில்லாவின் மற்றொரு சிறப்பம்சம் இத்தாலிய பளிங்கு கற்களுடன் பிரமிக்க வைக்கும் அதன் உட்புற வேலைப்பாடுகள்.

விடுமுறை காலங்களில் பொழுதைக் கழிக்கவும், பெரியளவிலான பார்ட்டிகளை நடத்தவும் இந்த வில்லா ஏற்றதாக இருக்கும். வர இருக்கும் மருமகளுக்காக அம்பானி குடும்பம் பார்த்து பார்த்து வாங்கியுள்ள இந்த வில்லா தான் இப்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகிறது மழை!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு... குரூப் 2, 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!

x