'வேட்டையன்’ ஓவர்... அபுதாபி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்!


ரஜினிகாந்த்

'வேட்டையன்’ படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், ஓய்வெடுப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் அபுதாபி புறப்பட்டு சென்றுள்ளார்.

'ஜெய்பீம்’ படப்புகழ் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘வேட்டையன்’. இதில் ரஜினிக்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக 'வேட்டையன்' படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். இந்தப் படத்திற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.

இந்தப் படத்திற்கு ’கூலி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று ஓய்வெடுப்பதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து எதிஹாட் ஏர்வேஸ் விமானம் மூலம் அபுதாபி புறப்பட்டு சென்றுள்ளார் ரஜினி. அபுதாபியில் ஒரு வாரம் தங்கி ஓய்வெடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x