800 விருந்தினர்கள், 600 பணியாளர்கள் தொழிலதிபர் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்டின் திருமண விழா கொண்டாட்டங்கள் பற்றிய திட்டம் வெளியாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட் திருமணம் எங்கு எப்படி நடக்கப் போகிறது என்பது தான் பலரின் எதிர்பார்ப்பும். ஏனெனில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களே பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதனால் திருமணத்தில் என்னென்ன விசேஷங்கள், எங்கு நடக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஜாம்நகரில் மூன்று நாட்கள் பிரம்மாண்டமாக நடந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களில் பலதுறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதைவிட இன்னும் பிரம்மாண்டமாக லண்டனில் ரூ.592 கோடி மதிப்பிலான அம்பானிக்கு சொந்தமான ஸ்டோக் பார்க் எஸ்டேட் ஹோட்டலில் தான் திருமணம் நடக்க இருக்கிறது என முன்பு சொல்லப்பட்டது. ஆனால், அதை அம்பானி குடும்பம் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், அங்கு பிரபலங்களுக்கான மதுபான விருந்தும் இசை நிகழ்ச்சியும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 12ம் தேதி நடைபெறும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு மே28ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. இந்தக் கொண்டாட்டத்தைத் தொடங்கும் விதமாக மே 28-ல் இத்தாலியில் இருந்து உல்லாசக் கப்பல் ஒன்று புறப்பட்டு தெற்கு பிரான்ஸ் சென்றடைகிறது.
இதன் பயண தூரம் மட்டும் 4380 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட 800 பேர் இந்தக் கப்பலில் செல்கிறார்கள். இவர்களை கவனிக்க கப்பலில் 600 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். திருமணக் கொண்டாட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!
வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!
ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!
காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!