'டூன்’ திரைப்படத்தின் ப்ரீக்குவலாக உருவாக இருக்கும் ‘டூன்: ப்ரோபிசி’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'காதல் தேசம்’, ‘இருவர்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை தபு. இவரது நடிப்பில் சமீபத்தில் ‘க்ரூ’ என்ற படம் வெளியானது. இதனை அடுத்து, கடந்த 2021ல் வெளியான ‘டூன்’ திரைப்படத்தின் ப்ரீக்குவல் ‘டூன்: ப்ரோபிசி’ என்ற பெயரில் ஹெச்பிஓ தொலைக்காட்சியில் உருவாகிறது. இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தபு.
’டூன்’ கதை பிரையன் ஹெர்பர்ட் மற்றும் கெவின் ஜே. ஆண்டர்சன் எழுதிய ‘சிஸ்டர்ஹூட் ஆஃப் டூன்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இரண்டு சகோதரிகள், அவர்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்த்துப் போராடுவதை ஒட்டி இந்தக் கதை நகர்கிறது.
தற்போது உருவாக இருக்கும் ‘டூன்’ ப்ரீகுவலில் தபுவின் கதாபாத்திரம் வலுவான மற்றும் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘டூன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே சமயத்தில்தான் ‘டூன்: ப்ரோபிஸி’யும் அறிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் டெனிஸ் வில்லெனுவே இந்தத் தொடரை இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் திரைப்படப் பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டி இருந்ததால், இதில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அன்னா ஃபோர்ஸ்டர் இந்த ப்ரீகுவலை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!
மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!
டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!
பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!