நடிகர் விஜயின் ’GOAT' ஆடியோ வெளியீடு எங்கே நடக்குது?... மாஸ் பிளான்!


விஜய்

நடிகர் விஜயின் ’GOAT' படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே நடக்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ’GOAT' படம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. செப்டம்பர் 5 படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அமெரிக்காவில் தற்போது நடந்து வருகிறது. இதோடு, படத்தின் புரோமோஷன் பணிகளையும் படக்குழு திட்டமிட்டு வருகிறது.

விஜய், வெங்கட்பிரபு

அந்த வகையில், படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே நடக்க இருக்கிறது என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. கடைசியாக விஜயின் ‘மாஸ்டர்’ படத்திற்குதான் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதன் பிறகு விஜயின் ‘பீஸ்ட்’ படம் கொரோனா சமயத்தில் வெளியானதால், அதற்கு இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை.

‘லியோ’ பட சமயத்தில் ரஹ்மானின் இசை வெளியீட்டு விழாவின் போது அதிகமாக வந்த ரசிகர்கள் கூட்டத்தால் பிரச்சினை எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்டே, ‘லியோ’ இசை வெளியீடும் ரத்தாகி பின்பு வெற்றிவிழா நடத்தப்பட்டது.

இதனால், ’GOAT' படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்தனர். அந்தத் தகவல் இப்போது கசிந்துள்ளது. அதாவது, இசை வெளியீட்டு விழா ‘லியோ’ படத்திற்கு முதலில் திட்டமிட்டபடி மலேசியாவில் நடக்காமல் போனது. இதனால், ’GOAT' படத்தின் இசை வெளியீட்டை அங்கே வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

நடிகர் விஜய்

இன்னொரு திட்டமாக சென்னை தாண்டி மதுரை, கோயம்புத்தூர் என விஜயின் அரசியல் அச்சாரத்திற்கும் வழிவிடும்படி இந்த இசை வெளியீட்டை மற்ற மாவட்டங்களில் வைக்கலாமா என்று பேசி வருகின்றனர்.

ஆனால், இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பே விஜய் மதுரையில் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டை நடத்த அதிக வாய்ப்பிருப்பதால் மலேசியாவே படக்குழுவின் முதல் சாய்ஸாக உள்ளது. விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும்.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

x