புது சேனல் தொடங்கும் கலாநிதி மாறன்... என்ன ஸ்பெஷல் தெரியுமா?!


கலாநிதி மாறன்

சன் தொலைக்காட்சி நிறுவனர் கலாநிதி மாறன் புது சேனல் ஒன்றைத் தொடங்க இருக்கிறார். இதில் என்ன ஸ்பெஷல் என்ற விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது.

சன் தொலைக்காட்சி குழுமம் சின்னத்திரை ரசிகர்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு சேனல்களைத் தொடங்கியுள்ளது. இதன் அடுத்தக் கட்டமாக ஹாலிவுட் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஹாலிவுட் படங்களுக்கென்றே பிரத்யேகமாக ‘சன் ஹாலிவுட்’ என்ற சேனலைத் தொடங்க உள்ளது.

கலாநிதி மாறன்

ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் மற்றும் ஹாரர் படங்களுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டே ஹாலிவுட் படங்கள் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் டப் செய்து வெளியிட்டு வருகிறார்கள். அப்படி தமிழில் டப் செய்து வெளியான ஹாலிவுட் படங்களை 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய இருக்கிறது சன் ஹாலிவுட்.

ஏற்கனவே சீரியல், ரியாலிட்டி நிகழ்ச்சி, படங்கள், இசை என ஒவ்வொன்றுக்கும் பிரத்யேக சேனல்களைத் தொடங்கி ஹிட்டடித்திருக்கிறது சன் குழுமம்.

கலாநிதி மாறன்

தொலைக்காட்சி மட்டுமல்லாது படங்கள் தயாரிப்பு, ஐபிஎல் போட்டிகளில் சொந்தமாக கிரிக்கெட் அணி என கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் சன் குழுமம் அடுத்தக்கட்டமாக ஆரம்பித்திருக்கும் இந்த புது சேனல் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x