பழம்பெரும் நடிகர் சதீஷ் ஜோஷி நேற்று காலமானார். இந்த செய்தி மராத்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சதீஷ் ஜோஷி தனது அட்டகாசமான நடிப்புத் திறமையால் மராத்தி பொழுதுபோக்குத் துறையில் முத்திரை பதித்தவர். அவர் தனது பல சீரியல்கள் மூலம் மகாராஷ்டிர குடும்பங்களில் பிரபலமானார். ஜீ மராத்தி சேனலில் ஒளிபரப்பப்பட்ட ’பாக்யலட்சுமி’ சீரியலில் தனது கதாபாத்திரத்திற்காக அவர் மிகவும் பிரபலமானார்.
மூத்த நடிகர் வீரேந்திர பிரதான் இயக்கிய சீரியல்களில் ஒரு பகுதியாக இருந்தார். சாகித்ய சங்கத்தின் மச்சகடிகா நாடகத்திலும் பணியாற்றியுள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று மாலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சதீஷ் ஜோஷி, மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!