நிறைமாத கர்ப்பிணியாக ஆட்டம் போட்ட அமலாபால்... பதறிய நெட்டிசன்கள்!


அமலாபால்

நடிகை அமலாபால் நிறைமாதத்தில் ஆட்டம் போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் பதறிப் போயிருக்கின்றனர்.

கோவாவை சேர்ந்த தொழிலதிபர் ஜெகத் தேசாயுடன் கடந்த வருடம் திருமணம் முடித்த சில வாரங்களிலேயே தனது கர்ப்ப செய்தியை அறிவித்தார் நடிகை அமலாபால். கர்ப்ப காலத்தில் தனது மகிழ்ச்சி மற்றும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு யோகா செய்வது, தியானம் என அமைதியான முறையில் நாட்களை நகர்த்தி வந்தார் அமலா.

அமலாபால் வளைகாப்பு

இவருக்குப் பக்க பலமாக இவரது கணவர் ஜெகத்தும் அமலா பால் உடனிருந்து கவனித்தார். தன் கணவரை பெற்றது தான் வாழ்நாளில் செய்த பாக்கியம் எனவும் சமீபத்தில் உருகியிருந்தார் அமலா. தன்னுடைய ஏழாவது மாதம் தொடங்கியபோது, கிளப்பில் நடனம் ஆடி அதை கொண்டாடினார், போன மாதம் வளைகாப்பும் நடத்தினார்.

இப்போது ஒன்பதாவது மாதத்தை எட்டியிருக்கிறார் அமலா. இதை வரவேற்கும் விதமாக வீட்டிலேயே கியூட்டாக நடனம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘ஒன்பதாவது மாதத்தை வரவேற்கிறேன். உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பதறிப் போயுள்ளனர். ’நிறைமாத கர்ப்பிணி இப்படியா ஆட்டம் போடுவது? கவனமாக இருங்கள்’ என்றும் கூறி வருகின்றனர். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

x