இரண்டே நாட்களில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார் நடிகர் அஜித். இது அஜித் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
’விடாமுயற்சி’ ஷூட்டிங் பணப் பிரச்சினைகளால் லாக் ஆகி கிடக்க, அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தொடக்கம் என்ற செய்தி வந்தது. பூஜையுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது.
ஆனால், இரண்டு நாட்கள் மட்டும் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ‘குட் பேட் அக்லி’ டீம் சென்னை திரும்பியிருக்கிறது என்ற செய்தி ரசிகர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது. ஹைதராபாத்தில் அஜித்தின் படப்பிடிப்பு என்றாலே ராமோஜிராவ் சிட்டியில்தான் பெரும்பாலும் நடக்கும்.
ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக ஹைதராபாத் சாரதி ஸ்டுடியோவில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். எளிமையாக பூஜை போட்டு முதலில் ஆக்ஷன் காட்சிகளுடன் தான் தொடங்கி இருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளுக்காக அஜித் முன்பே பக்காவாக ரிகர்சல் செய்துவிட்டதால் ஒரு வாரம் என திட்டமிட்டிருந்த ஹைதராபாத் ஷெட்யூல் எந்தவிதமான தாமதமும் இல்லாமல் முடிந்ததால் இரண்டே நாட்களில் அதை படமாக்கி விட்டார்களாம்.
இதனால், அஜித் உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டார் என சொல்லப்படுகிறது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு குறித்தான விவரமும் விரைவில் தெரியவரும். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிப்பார் எனத் தெரிகிறது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த அதிர்ச்சி... சிவகாசியில் மற்றொரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!
கனமழை: கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் 50 பேர் பலி!
உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி... அள்ளி வழங்கும் அமெரிக்கா!
மனைவி நடத்தையில் சந்தேகம்... 2 குழந்தைகளைக் கொன்று விட்டு கணவனும் தற்கொலை!