'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!


'பாகுபலி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்து இயக்குநர் ராஜமெளலியிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ‘பாகுபலி படத்தின் 3ம் பாகம் நிச்சயம் உருவாகும். இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’ என சொல்லி இருக்கிறார்.

பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடிக்க ‘பாகுபலி’ படத்தின் ப்ரீகுவல் 'பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்' , டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த மாதம் 17ம் தேதி வெளியாகிறது. அனிமேஷன் தொடராக வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்தது.

ராஜமவுலி

இதில் இயக்குநர் ராஜமெளலியுடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். ‘பாகுபலி’ திரைப்படம் தனது மனதிற்கு நெருக்கமானது என்று நெகிழ்ந்திருக்கிறார் ராஜமெளலி. மேலும், இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்று நடிகர் பிரபாஸிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

இதற்கு அவர் சிரித்துக் கொண்டே, ’இயக்குநருக்கு தான் இந்தக் கேள்வி’ என்றார். உடனே ராஜமெளலி, ”நான் எங்கு சென்றாலும் இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாகக் கேட்டு வருகின்றனர். கண்டிப்பாக அவர்களது விருப்பம் நிறைவேறும்.

'பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்' விழாவில் இயக்குநர் ராஜமெளலி

இதுபற்றி, நானும் பிரபாஸூம் பேசி வருகிறோம்” என்றார். கூடுதல் தகவலாக பாகுபலி 3ம் பாகத்தில் கட்டப்பாவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ராஜமெளலி ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை முடித்துவிட்டு தற்போது, மகேஷ் பாபுவுடன் புதிய படத்தை அறிவித்திருக்கிறார். மேலும், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று அவர் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x