மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு டெல்லியில் குடியரசுத் தலைவரால் இன்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பெற்றுக் கொண்டார். இதுகுறித்து, திரையுலகினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பத்மபூஷன் விருதை பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "விருதை வாங்க கேப்டன் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம். இருப்பினும் விஜயகாந்துக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று இரவு அமைச்சர் அமித்ஷா வீட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விருந்தில் கலந்துகொள்ள உள்ளோம். தமிழ்சங்கத்தின் சார்பில் கேப்டனுக்கு நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்
நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அவரது மறைவுக்குப் பின்பு அவரது கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் நடந்த இந்த விழாவில் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட விருது வழங்கப்படாததால் சர்ச்சை கிளம்பியது. இதற்கு காரணம் தேமுதிக, பாஜகவுடன் கூட்டணி வைக்காததுதான் என சொல்லப்பட்டது.
இதனையடுத்து, பத்ம விருதுகளின் அடுத்தகட்ட நிகழ்வு இன்று மாலை நடைபெற இருக்கிறது. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்க இருக்கிறார். விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரமேலதா விருதினைப் பெற இருக்கிறார்.
இதற்காக நேற்று அவர் தனது சகோதரர் சுதீஷூடன் டெல்லி கிளம்பி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் கொடுத்த பேட்டியில், கேப்டனுக்கான பத்ம விருதை வாங்கிவிட்டு சென்னை வந்ததும் கேப்டன் கோயிலுக்கு கொண்டு செல்லப் போவதாக சொன்னார்.
இந்த நிலையில், விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுவது பற்றி திரையுலகினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “என் அன்பு நண்பர் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அவரது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்!
எனக்கும் அவருக்கும் பிடித்த எம்.ஜி.ஆர். பாடல் ஒன்றை பாடி அவரை வாழ்த்த விரும்புகிறேன். ”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நடிகர் பிரபு, “என் அன்பு சகோதரர், நண்பருக்கு விருது. பத்ம பூஷன் விருது கேப்டனுக்கு கிடைப்பது மகிழ்ச்சி. எங்கள் அன்னை இல்லத்தின் சார்பாக அவரது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்!” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!
கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!
ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!
எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!
ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!