விஜய் பட வருமானத்தை தள்ளிய கமலின் ‘தக் லைஃப்’... வெளியான சூப்பர் தகவல்!


விஜய்- கமல்

நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தின் வெளிநாட்டு உரிமம் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் விலைக்குப் போயிருப்பதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளது.

மணி ரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இதன் படப்பிடிப்பில் தற்போது நடிகர் சிம்புவும் இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் இந்த வருட இறுதிக்குள் படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தில் கமல்

இப்படியான சூழலில்தான், ‘தக் லைஃப்’ படத்தின் வெளிநாட்டு உரிமம் சுமார் ரூ. 60 கோடிக்கும் மேல் விற்பனையாகியுள்ளது. தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் படம் அதிக தொகைக்கு விற்பனையாகி இருப்பது படக்குழுவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் ‘எல்லாம் சிம்பு வந்த நேரம்’ எனச் சொல்லி கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ. 60 கோடிக்கு விற்பனையானது. ஆனால், அதை விடவும் ‘தக் லைஃப்’ படம் அதிக ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப்- சிம்பு

சமீபத்தில் தேதி பிரச்சினை காரணமாக நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் இருந்து விலகினர். அதற்கு பதிலாகதான் நடிகர் சிம்பு உள்ளே வந்திருக்கிறார். நடிகர் கமலோடு சேர்ந்து நடிப்பது மட்டுமல்லாது, அவரின் தயாரிப்பிலேயே தன்னுடைய 48-வது படத்திலும் நடிக்க உள்ளார் சிம்பு.

இதையும் வாசிக்கலாமே...

x