எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!


விஜய் யேசுதாஸ்- தர்ஷனா

"விவாகரத்து ஆன சமயத்தில் பெரிதாக வருத்தமில்லை. ஆனால், இன்னும் பொறுப்போடு இருக்க வேண்டும் என்பது மட்டும் புரிந்தது” என பாடகர் விஜய் யேசுதாஸ் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனது காந்தக்குரலால் ரசிகர்களை வசீகரித்தவர் யேசுதாஸ். இவரது மகன் விஜய் யேசுதாஸூம் பின்னணிப் பாடகராக வலம் வருகிறார். இவருக்கும் தர்ஷனா என்பவருக்கும் கடந்த 2007-ல் திருவனந்தபுரத்தில் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.

குடும்பத்துடன் விஜய் யேசுதாஸ்

இப்படியான சூழ்நிலையில்தான், கடந்த சில வருடங்களாகவே விஜய் யேசுதாஸ்- தர்ஷனா இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு பிரச்சினை என்ற செய்தி வலம் வரத் தொடங்கியது. இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், சமீபத்தில் விவாகரத்தும் பெற்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து மலையாள டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள விஜய் யேசுதாஸ், “உண்மையில், என்னுடைய விவாகரத்து குறித்து வருத்தப்பட எனக்கு நேரமில்லை. வருத்தப்பட்டு உட்காருவதை விட, இன்னும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தில் என்னுடைய குடும்பம் அதிகம் காயப்பட்டது” என்று சொல்லி இருக்கிறார்.

விஜய் யேசுதாஸ்

தொடர்ந்து அந்தப் பேட்டியில், “பிரபலமாக இருப்பது விவாகரத்து விஷயத்தில் இன்னும் சிக்கலானது. ஏனெனில், பொதுவெளியில் வரும் பேச்சுகளையும் கேள்விகளையும் சமாளிக்க வேண்டும். நான் முடிந்தவரை யாரையும் காயப்படுத்தக் கூடாது என்று நினைக்கிறேன். நாங்கள் இருவரும் இப்போது எங்கள் குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருக்கிறோம்” என்றும் சொல்லி இருக்கிறார் விஜய்.

இதையும் வாசிக்கலாமே...

x