அப்படி ஆச்சுனா என்ன ஆகறது... ஆல்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!


சஞ்சீவ்- ஆல்யா

தனது இரு குழந்தைகளுடனும் ஆல்யா பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்ஸ்டாவில் இதைப் பார்த்துவிட்டு ‘அப்படி ஆச்சுனா, என்ன ஆகறது?’ என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது இவருக்கு அய்லா என்ற மகளும் அர்ஷ் என்ற மகனும் உள்ளனர். குழந்தைகளை பார்த்துக் கொண்டே இருவரும் சீரியலில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

சஞ்சீவ்- ஆல்யா

தற்போது சன் டிவியில் 'இனியா' என்ற சீரியலில் ஆல்யாவும், 'கயல்' என்ற சீரியலில் சஞ்சீவும் நடித்து வருகின்றனர். தங்கள் மகள் அய்லாவின் குறும்புகளையும் அவரின் கியூட்டான நடன வீடியோக்களையும் தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கத்தில் இருவரும் பதிவு செய்து வருகின்றனர். அய்லாவின் இந்த க்யூட்டான குறும்புத்தனங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், ஆல்யா நேற்று தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றிருக்கிறார். அப்போது குழந்தைகளை கைப்பிடித்து அழைத்து செல்வதற்கு பதிலாக அவர்களை அங்கும் இங்கும் நகர விடாமல் இருப்பதற்காக தனது கழுத்தில் துப்பட்டாவை போட்டுக்கொண்டு அதன் இரு முனைகளிலும் குழந்தைகளின் கையை இறுக கட்டியிருக்கிறார் ஆல்யா.

மேலும், ’உங்கள் குழந்தைகளையும் சமாளிக்க இதுபோன்று செய்யுங்கள்’ எனவும் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தான் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, 'குழந்தைகள் சேட்டை செய்கிறார்கள் என்றால் அவர்களது கையை பிடித்து அழைத்துச் செல்லலாம். அதற்கு பதிலாக இப்படி கையை கட்டியிருப்பது ஆபத்தானது. ஏனெனில், திடீரென குழந்தைகள் குறுக்கே அங்கும் இங்கும் ஓடினால் அந்த துப்பட்டா கழுத்தை இறுக்கவும் அதிக வாய்ப்புள்ளது. அப்படி ஆச்சுன்னா என்ன ஆகறது? இதை மற்றவர்களையும் செய்யச் சொல்லி சொல்லாதீர்கள்' எனவும் ஆல்யாவை வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதையும் வாசிக்கலாமே...

x