மும்பையில் நடைபெற்ற 'GQ இந்தியா’ விருது விழாவில் உச்சக்கட்ட கவர்ச்சியில் உடையணிந்து பாலிவுட் ரசிகர்களை வாய் பிளக்க செய்திருக்கிறார் நயன்தாரா. பிளாக் அண்ட் வொயிட் கலரில் ஹாலிவுட் ஹீரோயின் போல ஃபோட்டோஷூட் எடுத்தும் வைரலாக்கியிருக்கிறார்.
ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமான நயன்தாரா, ‘ஜவான்’ படத்திற்காக பாலிவுட்டில் பல விருதுகளையும் வென்றார். இப்போது 'GQ இந்தியா’ மேகசின் நடத்தும் விருது விழாவில் ‘மோஸ்ட் இன்ஃபுளூயன்ஷியல் யங் இந்தியன்ஸ் 2024’ விருதை வென்றிருக்கிறார்.
இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்று, பாலிவுட் ரசிகர்களை வாய் பிளக்க செய்திருக்கிறார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு செல்லும்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலக்குகிறார்கள் ஹீரோயின்கள். அப்படி, விருது விழாவில் நயன்தாரா அணிந்திருந்த உடை நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஹாலிவுட் ஹீரோயின் போல சிக்கென்ற டீப் லோ நெக் ஆடை அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார் நயன். படங்களில் நடிப்பது, தயாரிப்பது மட்டுமல்லாது நாப்கின், ஸ்கின் கேர் என தொழில்களிலும் முதலீடு செய்துள்ளார் நயன்தாரா.
நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, “சமூகத்தில் பெண்கள் மீது உள்ள பல கட்டுப்பாடுகளை உடைத்து வருவது மிகப்பெரிய விஷயம். அதை செய்பவர்கள் தங்களுக்காக செய்கிறார்கள் என்பதையும் தாண்டி குரல் இல்லாமல் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் சேர்த்தே தான் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து