லைகா நிறுவனத்துடன் பண பரிவர்த்தனை... ஆடிட்டர் அறிக்கையை ஆராய விஷாலுக்கு அவகாசம்!


நடிகர் விஷால், லைகா நிறுவனம்

லைகா நிறுவனத்திற்கும் நடிகர் விஷாலிற்கும் இடையே நடைபெற்ற பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்த அறிக்கையை, நீதிமன்றம் நியமித்த ஆடிட்டர் சென்னை உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்தார்.

விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை திருப்பி செலுத்தாத நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

நடிகர் விஷால்

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதிசெய்திருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய ஆடிட்டர் ஶ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து 3 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு விவரங்களையும், இன்றைய நாள் வரைக்குமான வங்கி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி பி. டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கும், விஷாலிற்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்து ஆடிட்டர் ஶ்ரீகிருஷ்ணா ஆய்வு செய்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. ஆடிட்டரின் அறிக்கை குறித்து ஆராய வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளி வைக்கக்கோரி விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

“பல பெண்களோடு அப்படி என்ன வாழ்க்கை...” நடிகர் தனுஷை விளாசிய பிரபல தயாரிப்பாளர்!

x