என் போன்ற நடிகர்களைக் கொண்டாட வேண்டாம்... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஃபகத் ஃபாசில்!


ஃபகத் ஃபாசில்

மலையாளத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆவேசம்’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தச் சூழல், “சினிமாவை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என ஃபகத் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவை மொழி கடந்து சினிமா ரசிகர்கள் வரவேற்று வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’, ‘பிரேமலு’ போன்ற படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ரீதியாக ஹிட்டடித்தது. அடுத்து, ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ஆவேஷம்’. இதில் லோக்கல் தாதாவாக அதகளப்படுத்தி இருக்கும் ஃபகத்தின் நடிப்புக்கு ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கையில், ஃபகத் சினிமாவைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பேசியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. யூடியூப் சேனல் ஒன்றிற்கு நேற்று அளித்த பேட்டியில், “தியேட்டரில் படம் பார்த்துவிட்டு அங்கு பேசுங்கள் அல்லது படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்ப வரும்போது பேசுங்கள். அதுபோதும்!

மற்றபடி வீட்டில் அமர்ந்து சாப்பிடும்போது கூட நடிகர்களையும் அவர்களது நடிப்பையும் பற்றி ரசிகர்கள் பேச வேண்டும் என்பதில்லை. சினிமா அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. அதற்கென்று ஒரு எல்லை உண்டு.

பகத் பாசில்

சினிமாவை விடவும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் நிறைய உள்ளது. என் போன்ற நடிகர்களை கொண்டாட வேண்டாம்” என்று சொன்னார் ஃபகத்.

இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர், ‘உங்களுக்கென்று வாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள் என்று பகத் சொல்கிறார்’ எனக் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் தங்களின் ஃபேவரிட் ஹீரோவே இப்படி சொல்லிவிட்டாரே என அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x