ரோமியோவ... ‘அன்பே சிவம்’ போல ஆக்கிடாதீங்க... நடிகர் விஜய் ஆண்டனி கதறல்!


விஜய் ஆண்டனி - ப்ளுசட்டை மாறன்

கமல், மாதவன் நடிப்பில் வெளியாகி வசூலில் பின்தங்கிய 'அன்பே சிவம்' படம், காலம் கடந்தும் கொண்டாடப்படுவதைப் போல ரோமியோ படத்தை ஆக்கிவிடாதீர்கள் என்று நடிகர் விஜய் ஆண்டனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் ஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி ரோமியோ திரைப்படம் வெளியானது. கணவனை வெறுக்கும் மனைவி, மனைவியின் அன்பைப் பெறப் போராடும் கணவன் என்ற மெளனராகம் டெம்ப்ளேட் கதையுடன் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சித்து திரைப்பட விமர்சகர் ப்ளுசட்டை மாறன், தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு இருந்தார். வழக்கம்போல இந்த படத்தில் எதுவுமே இல்லை என்று தனது ட்ரேட்மாக் வசனத்துடன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ரோமியோ

இதை கண்டித்து நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில், 'பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து சொல்லும் ப்ளுசட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனத ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே ரோமியோ ஒரு நல்ல படம். போய் பாருங்க புரியும். ரோமியோவை அன்போ சிவம் படம் மாதிரி ஆக்கிடாதீங்க..' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் கமல், மாதவன், கிரண், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் கநட்த 2003ம் ஆண்டு வெளியான அன்பே சிவம் திரைப்படம், அப்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. காலம் கடந்து தற்போது அன்பே சிவம் கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற நிலையை, ரோமியோ படத்திற்கு கொடுத்து விடாதீர்கள் என்று ரசிகர்களுக்கு விஜய் ஆண்டனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயிலுக்கு இதமான தகவல்... தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

சென்னையில் வாக்கு குறைய இவர்கள் தான் முக்கிய காரணம்... மாநகராட்சி ஆணையர் பரபரப்பு பேட்டி!

x