[X] Close

மீ டூ இயக்கத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ஆதரவு


anirudh-supports-me-too

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Oct, 2018 12:12 pm
  • அ+ அ-

மீ டூ மூலம் பெண்கள் பாலியல் புகார்கள் கூறுவதற்கு இசையமைப்பாளர் அனிருத் ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஹாலிவுட்டில் தொடங்கிய மீ டூ இயக்கம் இந்தியாவிலும் இப்போது வலுப்பெற்றுள்ளது.

குறிப்பாக கோடம்பாக்கத்தில் வைரமுத்து, ஜான் விஜய், சுசி கணேசன், அர்ஜூன் என பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டுள்ளது.
இந்த இயக்கம் குறித்து அண்மையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவித்திருந்தார். மீ டூ புகாரில் அடிபடும் பெயர்கள் அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் மீ டூ மூலம் பெண்கள் பாலியல் புகார்கள் கூறுவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர், "மீ டூ இயக்கம் நல்ல விஷயம்தான். பெண்கள் ஓபனாக சொல்கிறார்கள். வழக்கு போட்டிருக்கிறார்கள். வழக்கு நிரூபிக்கப்பட்டால் உண்மை முகம் வெளிவரும்" என கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சிம்பு பெண்களை ஆபாசமாக சித்தரித்து பீப் பாடல் பாடியதாக எழுந்த சர்ச்சையில் இசையமைப்பாளர் அனிருத்தும் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடலுக்கு அனிருத்தே இசையமைத்ததாக கூறப்பட்டது.

அதே பேட்டியின் போது பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் இன்னும் இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆகும் என்றும் அவர் கூறியிருந்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close