[X] Close

சர்காருக்கு மட்டுமல்ல இப்போது கத்திக்கும் சிக்கல்


now-kaththi-in-trouble

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Oct, 2018 11:39 am
  • அ+ அ-

முகமது இம்ரானுல்லா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சர்கார் திரைப்படம் சட்ட போராட்டத்தில் சிக்கியுள்ள நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான கத்தி திரைப்படமும் சிக்கலில் உள்ளது.

இந்தப் படத்தில் ரீமேக் உரிமையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் கே.ரங்கதாஸ். கடந்த ஆண்டு இந்த வழக்கைத் தொடர்ந்த அவர், கத்தி கதை தன்னுடையது என்றும் முருகதாஸ் காப்புரிமையை மீறி தனக்கு எந்த கிரெட்டிடோ அல்லது பணமோ தராமல் படத்தை எடுத்துவிட்டதாகக் கூறியிருந்தார்.

மேலும், தெலுங்கில் படம் ரீமேக் செய்யப்பட்டதுபோல் வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யும் உரிமையை முருகதாஸ் விற்பதற்குள் அதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்நிலையில், கத்தி ரீமேக் உரிமைகளை விற்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை முருகதாஸ் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எதிர் மனுவும் தாக்கல் செய்துள்ளது. தடையை நீக்கக் கோரியுள்ளது.
இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 31-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்கார் வழக்கு அக் 30-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் முருகதாஸுக்கு மிக முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close