டெல்லியில், கும்பல் நிறைந்த பேருந்தில் பிகினி உடையில் ஒரு பெண் ஏறி இருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு பேருந்தில் இருந்த பொதுமக்கள் பதறிப்போயுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
டெல்லியில், கூட்டம் நிரம்பி வழிந்த பேருந்தில் பிகினி உடை அணிந்த ஒரு பெண் ஏறியிருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேருந்தில் இருந்த சகபயணி ஒருவர் பேருந்தின் கதவருகே நின்றிருந்த அவரை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அவரது உடையைப் பார்த்து திகைத்து அருகில் இருந்த ஒரு பெண் பயணி அவரிடமிருந்து விலகிச் செல்கிறார். பின்னர், அந்தப் பெண்ணின் முன் அமர்ந்திருந்த மற்றொரு பயணியும் தனது இருக்கையை விட்டு வெளியேறுகிறார்.
’பொதுவில் இப்படித்தான் உடை அணிய வேண்டுமா... இதுதான் பல பிரச்சினைகளுக்குக் காரணம்’ எனவும் ‘சோஷியல் மீடியாவில் கவன ஈர்ப்புக்காக இப்படிச் செய்ய வேண்டுமா? இது முட்டாள் தனம்’ என்றும் நெட்டிசன்கள் பிகினி பெண்ணை திட்டித் தீர்த்து வருகின்றனர். இன்னும் சிலர் இந்தப் பெண்ணுக்கு ஆதரவும் கொடுத்து வருகின்றனர். ‘உடை என்பது அவருடைய விருப்பம். இதில் எதிர்ப்புத் தெரிவிக்க எதுவும் இல்லை’ என அவர்கள் வக்காலத்து வாங்கி வருகின்றனர்.
மேலும், டெல்லி காவல்துறையை இந்த வீடியோவில் டேக் செய்திருக்கும் நெட்டிசன்கள் இந்தப் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்பு, இதேபோல ஒரு சம்பவம் நடந்தது. அதாவது, நாக்பூர் சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் நிர்வாணமாக ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...