’சந்திரமுகி2’ திரைப்படம் வெற்றிப் பெற வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் பழநி, மந்த்ராலயம் என கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
பி. வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா உள்ளிட்டப் பலர் நடித்துள்ள ‘சந்திரமுகி2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றிக்காக நடிகர் லாரன்ஸ் நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். மின் இழுவை ரயில் வழியாக மலைக் கோயிலுக்கு சென்று ராஜ அலங்காரத்தில் முருகனை சாமி தரிசனம் செய்தார்.
இதுமட்டுமல்லாது, மந்த்ராலயத்திற்கு சென்று ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை நேரில் தரிசித்திருக்கிறார். நடிகர் ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும், அவர் பின்பற்றும் பல கொள்கைகளை இவரும் தீவிரமாக கடைப்பிடிப்பவர். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலவே இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் வெளியீட்டிற்கு முன் மந்த்ராலயம் சென்று ராகவேந்திரா சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.