ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘எஸ்.கே.21’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் ராணுவ வீரராக நடித்து வருகிறார். காஷ்மீரில் நடந்த இதன் படப்பிடிப்பிற்காக சிறப்பு ராணுவ பயிற்சிகள் எடுத்ததாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்து இருந்தார். இதற்கடுத்து இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அவரது பிறந்தநாளின் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்தானத் தகவல்தான் தற்போது வெளியாகியுள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம். நாம் இருவரும் இணைந்து திரையில் மேஜிக் செய்வோம் என சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் தனக்கு சொன்ன வாழ்த்துக்கு நன்றி சொல்லி இதைத் தெரிவித்து இருந்தார்.
’எஸ்.கே.21’ படம் மட்டுமல்லாது, நீண்ட நாட்களாக விஎஃப்எக்ஸ் பணியில் இருக்கும் ‘அயலான்’ படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.