40 வயதைக் கடந்தும் பேரழகியாக வலம் வருகிறார் த்ரிஷா. சம காலத்தில் போட்டியாக வலம் வந்த ஜோதிகா முதல் நயன்தாரா வரை அத்தனை பேரும் கல்யாண ஜோதியில் கலந்துவிட்டார்கள். ‘காவாலா’வுக்கு ஆடிய தமன்னா கூட வெளிநாடுகளில் ‘வெட்டிங் ஷாப்பிங்’ கில் பிஸியாக இருக்கிறார்.
தெலுங்கில் அனுஷ்காவை சுற்றிக்கொண்டிருக்கும் கல்யாண சர்ச்சை இங்கே த்ரிஷாவையும் இப்போது சுற்றிக்கொண்டிருக்கிறது. மலையாள சினிமா தயாரிப்பாளர் ஒருவரை த்ரிஷா திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த வாரத்தில் இணையத்தில் செய்திகள் சிறகடித்தன. அந்தச் செய்திக்காக கொஞ்சமும் டென்ஷனாகாத த்ரிஷா, “வதந்திகளைப் பரப்ப வேண்டாம்... அமைதியாக இருங்கள்...” என ‘லியோ’ பட வசனத்தை ட்விட்டரில் பகிர்ந்து ‘சியர்ஸ்’ சொன்னார்.
வரப் போகும் புது வருஷம், திரையுலகில் த்ரிஷாவுக்கு 25-வது வருஷம். இப்போதும் இளம் நடிகைகளை ஓரம்கட்டி, ‘லியோ’ ரிலீஸூக்காக காத்திருக்கிறார்.
அடுத்து இந்தியில் சஞ்சய் தத் ஜோடியாக த்ரிஷா நடிப்பது உறுதியாகி விட்ட நிலையில், சல்மான் கானுடன் ஜோடி சேர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், தனது திருமணம் குறித்து அவ்வப்போது வந்துபோகும் வதந்திகள் குறித்து அக்கறையாய் விசாரிப்பவர் களிடம், “கல்யாணமா... எனக்கா..? இன்னும் ஆறேழு வருசத்துக்கு அதுக்கு வாய்ப்பே இல்லை” என்று விழிகள் விரியச் சொல்கிறாராம் த்ரிஷா.