'கர்ப்பமாக இருக்கிறேனா?'.... நடிகை கத்ரீனா கைஃப் விளக்கம்!


நடிகை கத்ரீனா கைஃப்

தொழிலதிபர் அம்பானியின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்காததால் நடிகை கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு கத்ரீனா கைஃப் விளக்கமளித்துள்ளார்.

கணவர் விக்கி கவுஷலுடன் கத்ரீனா கைஃப்

பாலிவுட்டின் பிரபல நடிகையான கத்ரீனா கைஃப் 2021-ம் ஆண்டு நடிகர் விக்கி கவுஷலை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில் கத்ரீனா கைஃப் பங்கேற்கவில்லை.

ஆனால், அவரது கணவர் விக்கி கவுஷல் மட்டும இந்த விழாவில் கலந்து கொண்டார். இதனால் கத்ரீனாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், கத்ரீனா கர்ப்பமாக இருப்பதால் தான் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வேகமாக பரவியது.

கத்ரீனா கைஃப்

இதற்கு கத்ரீனா கைஃப் தரப்பில் விளக்களிக்கப்பட்டுள்ளது." கத்ரீ கர்ப்பமாக இல்லை. அவர் திரைப்பட படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக உள்ளார். தொழில் ரீதியாக, கத்ரீனா அடுத்ததாக 'ஏக்தா டைகர்' திரைப்படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதியுடன் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தின் படப்பிடிப்பிலும் பிஸியாக இருக்கிறார்" என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கத்ரீனா கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அவர் கடைசியாக கொல்கத்தாவில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அணிந்திருந்த ஆடை பெரிதாக இருந்ததால், அவர் கர்ப்பத்தை மறைப்பதற்காக அணிந்திருக்கிறார் என்றும், அதனால் தான் அவர் அருகில் யாரையும் விடவில்லை என்ற செய்தியும் பரவியது குறிப்பிடத்தக்கது.

x