இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை முதல் பாகத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய் சேதுபதி, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் வெளியாகி வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. இதனிடையே, சிறுமலையில் தொடரும் மழை காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தில் அட்டக்கத்தி தினேஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் போது மஞ்சுவாரியார் மற்றும் வெற்றிமாறனுடன் தினேஷ் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது