[X] Close

மீம்ஸ் போட்டு தாளிக்கிறீங்களே! - விஜய்சேதுபதி ஆதங்கம்


vijaysedhupathi-vadachennai

விஜய் சேதுபதி

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 15:26 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

நல்லவேளை, வடசென்னையில் அமீர் நடித்த கேரக்டரில் நான் நடிக்கவில்லை. நடித்திருந்தால் தொடர்ந்து மூன்று வாரங்களாக இந்த ஆள் படம்தான் என்று என்னை மீம்ஸ் போட்டு கேலி செய்திருப்பீர்கள் என்று விஜய்சேதுபதி தெரிவித்தார்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ’கூகை திரைப்பட இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ’96’ படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம்குமார், இயக்குநர் வசந்தபாலன்,  எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பகவதி பெருமாள், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில், விஜய்சேதுபதியிடம் உதவி இயக்குநராக இருக்கும் பலரும் கேள்வி கேட்டார்கள். அதற்கு அவரும் பதிலளித்தார்.

புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நீங்கள் கதை கேட்பதில்லை என்று கூறப்படுகிறதே? என்று விஜய்சேதுபதியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு விஜய்சேதுபதி கூறியதாவது:

இந்த பொய்யை பரப்பியவரை முதலில் என்னிடம் கூட்டி வாருங்கள். என் ஆபீஸில் என்னை எப்போது வந்தாலும் பார்க்க முடியும். வருபவர்கள் அத்தனை பேரிடமும் பதில் சொல்லிவிடுவேன்.

எனக்கு இந்த தேதி வரை படம் இருக்கிறது. என்னால் கதை கேட்க முடியாது. கேட்டாலும் படம் பண்ண முடியாது. 2 வருடம் கழித்து பண்ணப் போகும் படத்தை இப்போதே தேர்ந்தெடுக்க முடியாது.

ஒரு இளம் இயக்குனர் தன் கதையை, தான் நம்பும்போது ஒரு இயக்குனராக மாறுகிறார். அந்தக் கதையின் மீது ஏதாவது ஒரு கருத்தை யாராவது சொன்னால் அதற்காக கோபப்பட வேண்டுமா? அல்லது அதில் என்ன பிரச்சினை என்று ஆராய வேண்டுமா? கோபப்படும் நிறைய பேரை நான் பார்க்கிறேன்.

ஏற்கெனவே வாரா வாரம் படம் வருகிறது என்று மீம் போட்டு என்னை தாளித்து விடுகிறீர்கள். நல்லவேளை வடசென்னையில் அமீர் கேரக்டரை நான் பண்ணவில்லை. இல்லையென்றால் 3 வாரமும் என் படம்தான் என்று சொல்லியிருப்பீர்கள்.

இவ்வாறு விஜய் சேதுபதி பதிலளித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close