கேன்சருடன் போராடிய அம்மா... மேடையில் உருகிய பிரியா பவானி ஷங்கர்!


தனது தாயாருடன் நடிகை பிரியா பவானி ஷங்கர்...

கேன்சருடன் போராடிய தனது அம்மாவின் கதையை உணர்ச்சிப் பூர்வமாக நடிகை பிரியா பவானி ஷங்கர் பகிர்ந்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் கேன்சர் மருத்துவமனை ஒன்று நடத்திய உலக ரோஜா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை பிரியா பவானி சங்கர் கலந்து கொண்டு புற்றுநோயை எதிர்த்து போராடுபவர்களை உற்சாகப்படுத்தி நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியதோடு தனது அம்மாவின் கதையையும் பகிர்ந்துள்ளார்.

பிரியா பவானி சங்கர்

நிகழ்வில் அவர், “கடந்த ஆண்டு என்னுடைய அம்மாவுக்கும் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்ததால் முழுமையாக குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறினர். அந்த நம்பிக்கையில் விரைவில் குணமடைவீர்கள் என எனது தாயிடம் அடிக்கடி கூறுவேன். அதிர்ஷ்டவசமாக அவர் குணமடைந்தார். அதுபோலவே, நீங்களும் உங்கள் நோய் குறித்து பதட்டப்படாமல் தைரியமாக எதிர் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்” என்று பேசி அங்கிருந்தவர்களுக்கு நம்பிக்கையளித்தார்.

x