[X] Close

மிளகாய்ப்பொடியை மடிச்சுத் தருவாங்க அம்மா! அப்போ பெப்பர் ஸ்ப்ரே இல்ல; - நடிகை மும்தாஜ்


mumtaz-pepperspray

நடிகை மும்தாஜ்

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 12:53 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

அப்பல்லாம் பெப்பர் ஸ்ப்ரே கிடையாது. அதனால, நான் வெளியேபோகும் மிளகாய்ப்பொடியை மடிச்சுத் தருவாங்க அம்மா. இதை எடுத்துக்கிட்டுத்தான் போவேன் என்று நடிகை மும்தாஜ் தெரிவித்துள்ளார்.

இப்போது மீ டூ எனும் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. சினிமாவில் இருக்கும் பெண்கள், சினிமாவில் இருக்கும் ஆண்கள் குறித்து மீடு எனும் ஹேஷ்டேக் மூலம் குற்றங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகை மும்தாஜ் தனியார் யு டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அதில் மும்தாஜ் தெரிவித்ததாவது:

இன்னிக்கி மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள், அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் விளைவுகளும் இருக்கும் என்பதுதான் என் கருத்து.

‘தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும்’ என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்கவேண்டும். மிகப்பெரிய கூட்டுமுயற்சியால் வருகிற சினிமாவில், தனியே ஏன் பேசவேண்டும்? என்று சிந்திக்கவேண்டும். தனியே வரச்சொல்லி என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள். நான் அப்படிப் பார்ப்பதையே தவிர்த்திருக்கிறேன்.

சில தருணங்களில், சில விழாக்களுக்கோ, படப்பிடிப்புக்கோ நான் மட்டுமே போகக்கூடிய சூழல் வரும்போது, என்னுடைய அம்மா, மிளகாய்ப்பொடியை ஒரு பேப்பரில் மடித்து, என்னிடம் தருவார். ‘எதுக்கும் இதைப் பாதுகாப்புக்கு வைச்சுக்கோம்மா. தப்பா ஏதாவது நடந்துச்சுன்னா, உடனே மிளகாய்ப்பொடியைத் தூவிடு’ன்னு கொடுத்திருக்காங்க. அப்பல்லாம், பெப்பர் ஸ்ப்ரே வரல.

இன்னிக்கி எனக்குத் தெரிஞ்ச நிறைய பெண்களுக்கு, பெப்பர் ஸ்ப்ரேயை பரிசாக் கொடுத்துருக்கேன்.

இவ்வாறு மும்தாஜ் தெரிவித்தார்.  

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close