[X] Close

லீனா பதில் சொல்லியே ஆக வேண்டும்!- சுசி கணேசனின் மனைவி காட்டம்


susi-ganesans-wife-slams-leena-manimekalai

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Oct, 2018 16:12 pm
  • அ+ அ-

தானும் தனது பெற்றோர் மற்றும் குழந்தைகள் அடைந்துள்ள மன வேதனைக்கு லீனா மணிமேகலை பதில் சொல்லியே ஆக வேண்டும் என ட்வீட் செய்திருக்கிறார் இயக்குநர் சுசி கணேசனின் மனைவி மஞ்சரி.

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவிட்டு வருகின்றனர். 

இந்த ஹேஷ்டேகின் கீழ் ஃபேஸ்புக்கில் பரபரப்பு புகாரை முன்வைத்தார் கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை. திருட்டப்பயலே போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் காருக்குள் வைத்து அத்துமீறியதாகக் கூறினார்.

இந்தப் புகாரை சுசி கணேசன் திட்டவட்டமாக மறுத்துவருகிறார்.

இந்நிலையில், சுசி கணேசனின் மனைவி மஞ்சரி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் என் கணவரின் பக்கம் நிற்கிறேன். லீனா மணிமேகலையின் நஙு திட்டமிட்ட அடிப்படை ஆதாரமற்ற கற்பனையான அவதூறுகளை மறுக்கிறேன்.

எங்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் ஒழுக்கமுள்ளவர். கொள்கைளையும் மதிப்பீடுகளையும் பின்பற்றுபவர். நல்ல கணவர் மட்டுமல்ல அன்பான தந்தையும் கூட.

நாங்கள் மீ டூ இயக்கத்தை ஆதரிக்கிறோம். ஆனால், லீனா போன்ற சில அதை ஆதாரமே இல்லாமல் தவறாகப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. 

என் கணவர் மீது அவதூறு பரப்பும் லீனாவின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளேன். எனது வயதான பெற்றோரும், என் குழந்தைகளும் அனுபவிக்கும் வேதனைகளுக்கு லீனா பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஒரு மனைவியாகவும் தாயாகவும் மகளாகவும் நான் முன்னெடுக்கும் போராட்டத்தில் உண்மை நிச்சயம் வெற்றி பெறும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close