”உங்கள் அப்பாவி கணவரை ஏன் ஏமாற்றினீர்கள் என எனக்குச் சொல்ல வேண்டும்” என ரசிகர் ஒருவர் சமந்தாவின் சமீபத்திய வீடியோவில் கமென்ட் செய்து கேட்டிருந்தார். இதற்கு இப்போது சமந்தா நாசூக்காக பதில் கொடுத்திருக்கிறார்.
சமூகவலைதளங்களில் நடிகை சமந்தா மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அண்மையில் அவர் மையோசிடிஸ் நோய் பாதிப்பிற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தார். இந்த பிரேக்கில் தன் உடல்நலன் குறித்தான பாட்காஸ்ட் ஒன்றை ’டேக் 20’ என்ற பெயரில் தொடங்கினார். அதில் தனது நண்பரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷூடன் இணைந்து ஒவ்வொரு டாபிக்கிலும் பேசி வருகிறார் சமந்தா.
அதில், தனது காலை நேரத்து ரொட்டீன் குறித்து பேசியிருந்தார் சமந்தா. அதில் தான் ரசிகர் ஒருவர், “உங்கள் அப்பாவி கணவரை ஏன் ஏமாற்றினீர்கள் என சொல்லுங்கள்” எனக் கேட்டிருந்தார்.
இதற்கு சமந்தா நேரிடையாக பதில் சொல்லாமல், “மன்னித்து விடுங்கள்! நான் வீடியோவில் பேசியிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உதவாது என்று நினைக்கிறேன். இதைவிட உங்களுக்கு இன்னும் வலிமையான விஷயம் தேவைப்படும். வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற கமென்ட்டுக்கு சமந்தா ஏன் பதில் கூற வேண்டும் எனவும் நடந்தது என்ன என்று தெரியாமல் எப்படி இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்றும் பலரும் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சீக்கிரம் சினிமாவில் கம்பேக் கொடுக்க இருக்கும் சமந்தா அட்லி-அல்லு அர்ஜூன் இணையும் படத்திலும் ‘தளபதி 69’ படத்திலும் கதாநாயகிகள் பட்டியலில் பரீசலனையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!
சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!
ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!