[X] Close

பொங்கலுக்கு ’பேட்ட’ Vs ’விஸ்வாசம்’?


petta-and-viswasam-releases-for-pongal

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 11:40 am
  • அ+ அ-

2019 பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, நவாசுதீன் சித்திக்கி, த்ரிஷா, சசிகுமார், விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார.

ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. டிசம்பரில் ரஜினி பிறந்த நாளன்று டீஸர் வெளியிடப்பட்டு, பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விசாரித்த போது, “உண்மைத்தான். ஆனால், இன்னும் எதுவும் முடிவாகவில்லை. பொங்கல் அல்லது குடியரசு தினத்தில் வெளியிட ஆலோசித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்கள். 

இந்நிலையில், அஜித்தின் ‘விஸ்வாசம்’  பொங்கல் வெளியீட்டு என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்புக்கு இடையே படத்தின் இறுதிகட்டப் பணிகளையும் ஒருசேர கவனித்து வருகிறார் இயக்குநர் சிவா. இப்படமும் கண்டிப்பாக பொங்கல் வெளியீடு, அதில் மாற்றமில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆனால், ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ இரண்டுமே ஒரே தேதியில் வெளியானால் வசூல் ரீதியாக பின்னடைவாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். கண்டிப்பாக ஏதாவது ஒரு படம் பின்வாங்கும் என்றும் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்கள்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close