[X] Close

கையில் 4 படம் இருக்குடா!- நெட்டிசனுக்கு சித்தார்த் நெத்தியடி


and-don-t-call-me-bro-da-also-poda

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Oct, 2018 11:20 am
  • அ+ அ-

எப்போதும் ட்விட்டரா கையில் படமில்லையா எனக் கேட்ட நெட்டிசனுக்கு நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார் நடிகர் சித்தார்த்.

சபரிமலை, மீடூ இன்னும் என்ன சர்ச்சையாக இருந்தாலும் சரி, கேரளாவுக்கு நிதியுதவி திரட்டுதல் போன்ற எந்த விஷயமாக இருந்தாலும் சரி நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கருத்து தெரிவித்துவிடுகிறார். மேலும், அரசியல்வாதிகளின் கருத்துகளையும் அவ்வப்போது கிண்டல் செய்து பதிவிடுவார்.

மீடூ விவகாரம் தொடர்பாக நேற்று (அக்.21) தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர், "என்ன சார் கையில் படமில்லையா?" எனக் கேட்டிருந்தார்.

இதற்கு சித்தார்த், "நான் இப்போது 4 படங்களில் நடித்து வருகிறேன். அத்துடன் நெட்ஃப்ளிக்ஸ் தொடர் வேறு இருக்கிறது டா. நான் என்ன எப்பவும் ட்வீட் பண்ணிக்கிட்டிருக்கேன்னு நினைத்தாயா? எப்போது தேவைப்படுகிறதோ அப்போது செய்கிறேன். அதற்கு வெறும் ஒரு நிமிடந்தான் டா ஆகிறது. இன்றைய ஆபத்தான உலகில் நம் கருத்தை தெரிவிப்பது அவசியம் டா. அப்புறம் என்னை ப்ரோ என்று கூப்பிடாதே டா.. போடா" எனப் பதிவிட்டிருக்கிறார்.

சித்தார்த்தின் இந்தக் கருத்துக்கு குஷ்பு உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close