[X] Close

பேரனின் ஆசையை நிறைவேற்ற சென்னையில் ஆட்டோவில் பயணம் செய்த ரஜினிகாந்த்


rajini-travels-in-auto

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 08:58 am
  • அ+ அ-

பேரனின் ஆசையை நிறைவேற்ற நடிகர் ரஜினிகாந்த் தனது மகள், பேரனுடன் ஆட்டோவில் பயணம் செய்தார். ரஜினி ஆட்டோவில் வருவதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் கைய சைத்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வருகிறார். ரஜினிகாந்த்துடன் அவரது இளைய மகள் சவுந் தர்யா, பேரன் வேத் கிருஷ்ணா ஆகியோரும் வசித்து வருகி றார்கள். இந்நிலையில் நேற்று பேரன் வேத் கிருஷ்ணாவுடன் ரஜினிகாந்த் விளையாடிக் கொண் டிருந்தார்.

அப்போது ரஜினிகாந்திடம் பேரன் வேத் கிருஷ்ணா, ‘‘தாத்தா ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இதற்கு ரஜினிகாந்தும் சம்ம தம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, போயஸ் கார்டனில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டுக்கு ஆட்டோவில் செல்ல முடிவு செய்யப்பட்டது ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, பேரன் வேத் கிருஷ்ணா ஆகிய 3 பேரும் ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை ரஜினிகாந்தின் கார் ஓட்டுநர் பின்தொடர்ந்தார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோவில் வருவதைக் கண்ட ரசிகர்கள் பலர் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பதிலுக்கு ரஜினிகாந்தும் கையசைத்தார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் வீட்டில் 3 பேரும் ஆட்டோவில் இருந்து இறங்கினர். அங்கு பேரக் குழந்தைகளிடம் ரஜினிகாந்த் சுமார் 2 மணிநேரம் விளையாடினார். பிற்பகல் 1.30 மணியளவில் தனது காரில் ஏறி போயஸ் கார்டன் இல்லம் வந்தடைந்தார். அங்கு, பெங்களூரூவை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அவர்களிடம் கைகுலுக்கிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

ரஜினிகாந்த் திடீரென்று ஆட்டோவில் பயணித்தது சென்னை யில் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close