[X] Close

அப்பாவுக்கு ‘பிக் பாஸ்’; மகளுக்கு ‘ஹலோ சகோ’


sruthi-hasan-enter-tv-industry

ஸ்ருதிஹாசன்

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 21:34 pm
  • அ+ அ-

கமலைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் ‘ஹலோ சகோ’ நிகழ்ச்சி  மூலம் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்

டிவியில் உள்ளவர்கள் சினிமா உலகிற்கு வந்த காலம் போய், சினிமாவில் உலகில் இருப்பவர்கள் டிவியில் செல்லும் காலமிது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் கால்பதித்தார் கமல்ஹாசன். அந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, தற்போது 2-வது சீசனும் முடிவுற்று இருக்கிறது.

அவரைத் தொடர்ந்து விஷால், வரலட்சுமி சரத்குமார் இருவருமே தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசனும் நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார் ஸ்ருதிஹாசன். இதன் ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது சன் தொலைக்காட்சி. இதன் முதல் நிகழ்ச்சியில் வரவுள்ள பிரபலம் யார் என்பது விரைவில் தெரியவுள்ளது.

’ஏழாம் அறிவு’ படத்தின் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ‘3, பூஜை, புலி, வேதாளம், சி 3’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து ‘சபாஷ் நாயுடு’ படத்தில் அப்பாவுடன் நடித்து வந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது.

தற்போது இந்தி படமொன்றில் மட்டுமே நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து தமிழில் ‘ஹலோ சகோ’ நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close