நடிகை சாய் பல்லவி ரகசிய திருமணம் ?... வைரலாகும் புகைப்படம்!


ராஜ்குமார் பெரியசாமியுடன், சாய் பல்லவி

தென்னிந்தியாவின் பிரபல நடிகையான சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் மாலையும், கழுத்துமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சாய் பல்லவி.

கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான 'பிரேமம்' மலையாளத் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி.

2017-ம் ஆண்டு 'கரு' என்ற படத்தின் மூலம் தமிழில் இவர் அறிமுகமானார். 'மாரி 2', 'என்ஜிகே', 'கார்கி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ள சாய் பல்லவி , இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் திருமணம் செய்ததாக கூறப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

எஸ்கே 21 படப்பூஜை

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கழுத்தில் ரோஜா மாலைகளுடன் சாய் பல்லவி காட்சி தரும் இந்த புகைப்படத்தைப் பார்த்து இவர்கள் இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது.

ஆனால், இந்த புகைப்படம் வரவிருக்கும் ஒரு படத்தில் இடம் பெற்ற காட்சி என தற்போது தெரிய வந்துள்ளது. 'SK 21' என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை அறிவிப்பதற்காக சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் திருமணம் நடைபெற்றது போல போஸ் கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

x